Mandhira Malai

ebook

By Umayavan

cover image of Mandhira Malai

Sign up to save your library

With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.

   Not today

Find this title in Libby, the library reading app by OverDrive.

Download Libby on the App Store Download Libby on Google Play

Search for a digital library with this title

Title found at these libraries:

Loading...

குழந்தைகள் கதைகளைப் படைப்பது அலாதியானது. அவர்களின் உலகில் பேசாதனவெல்லாம் பேசும், நடக்காதனவெல்லாம் நடக்கும். இது மந்திர உலகமல்ல குழந்தைகளின் எதார்த்த உலகம். இங்கு நாம் சஞ்சரிக்கும் போது பல குற்றங்களிலிருந்து விடுபடுகிறோம்.

இந்த உலகத்தை நடைவழியில் கடந்து வந்தவர்கள் தான் நாமெல்லாம். மீண்டும் கதை வழியில் அவற்றுள் பிரவேசிப்பது ஆழ்மனத்திற்கு ஒரு ஆனந்த அனுபவத்தைத் தருகின்றது.

இன்றைய நவீன குழந்தைகளுக்கு நம்மைக் காட்டிலும் சிந்திக்கும் திறன் கூடுதலாக இருக்கிறதை பார்க்க முடிகிறது. அந்தச் சிந்தனை ஆற்றலை உரிய நேரத்தில் நேர்வழிப்படுத்துவது நமது கடமை.

கதைகளின் வழியில் அவர்களின் கற்பனை உலகை இன்னும் மிளிர, துளிர்க்கச் செய்ய முடியும். பெரும்பாலும் தனித்து விடப்படும் குழந்தைகளுக்கு பின்நாட்களில் தன்னளவிலான நம்பிக்கையின்மையும், எதையும் எதிர்கொள்ளும் திறனும் வாய்க்காமல் போகலாம். கூடுமான வரையில் அவர்களை பொதுத் தளத்தில் அங்கீகரிப்பதும், அவர்களுக்கான நம்பிக்கையை விதைப்பதும் நமது ஆகப் பெரும் கடமை.

கதைகளின் வழி அவர்களின் வாழ்வை நகர்த்தும் பொழுது, இன்னும் கூடுதலாக சிந்திக்கத் தொடங்குகிறார்கள். எதிலும் அவர்களைக் கட்டுப்படுத்துவதைவிட, அவர்களிடம் நாம் விட்டுக்கொடுத்து புரிந்து கொள்ள வைப்பதுதான் சமகாலத்தில் நாம் செய்ய வேண்டிய குழந்தை வளர்ப்புப் பணி.

ஒவ்வொரு கதைகளையும் அவர்களின் கண்கொண்டு பார்த்து, குழந்தைகளாகவே மாறி, அவர்களின் பேச்சு மொழி, வெகுளித்தன்மை உள்ளிட்டவற்றை உயிர்ப்புடன் இந்தக் கதைகளில் வடித்திருக்கிறேன் என நம்புகிறேன்.

இதுவரை பேசாத, நடக்காத பறவைகளும், விலங்குகளும் இந்தக் கதைகளின் மூலம் தங்களின் நீண்டநாள் ஆசையை நிவர்த்தி செய்து கொள்கின்றன. மனதிற்கு இதமான என பால்ய நினைவுகளை மீண்டும் இங்கு தரிசித்திருக்கிறேன். அதே துள்ளல், குறும்பு, துடிப்பு என கதை முழுக்க நானும் உலாவுகிறேன்.

உமையவன்

இந்தக் கடத்தல் சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியாகத் திகழ்பவன் எஸ்கொபார். கொலம்பியாவின் தலைநகரமான பொகாட்டோவில் கொடிகட்டிப் பறந்து, கோடி கோடியாகச் சம்பாதித்துக் கொண்டிருப்பவன் இவன். பயங்கர போதைக் குற்றங்களுக்காக இவனைத் தங்களிடம் அனுப்பும்படி அமெரிக்கா கேட்க, கொலம்பியா அரசாங்கமும் அதற்கு ஒப்புக்கொண்டு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.

எஸ்கொபாரும் அவனுடைய போதைக் கும்பலும் கொலம்பியாவில் இருக்கும்வரை அவர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை. சட்டம் எஸ்கொபாரை ஒன்றும் செய்யாது. ஆனால் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டால் சாகும்வரை சிறைவாசம் தான். ஆகவே, அமெரிக்காவுக்குத் தன்னை நாடு கடத்தாதிருக்கும்படி கொலம்பியா அரசாங்கத்தைப் பணியவைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறான் எஸ்கொபார். கூடவே ஒரு பயங்கர நடவடிக்கையும் மேற்கொள்கிறான். அது...

எஸ்கொபாரையும் அவன் கும்பலையும் நாடு கடத்த வேண்டும் என்று குரல் கொடுப்பவர்களைப் பிணைக் கைதியாகப் பிடித்து வைத்துக்கொண்டு சித்திரவதை செய்வது.

இந்தச் சூழ்நிலையின் பின்னணியில் ஆரம்பமாகிறது நோபல் பரிசு பெற்ற கேப்ரியல் மார்க்கிஸ் எழுதிய NEWS OF A KIDNAPPING-ஐ தழுவிய உண்மைத் தொடர்.

ரா.கி.ரங்கராஜன்

Mandhira Malai